×

சென்னை அம்பத்தூர் தனியார் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் தனியார் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பட்டரைவாக்கம் என்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இங்கு 500 மேற்பட்ட தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் இரும்பு உருக்கக்கூடிய தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டது. பழைய இரும்பு பொருட்களை கொண்டு வந்து அதனை உருக்கி திடமான இரும்புகளை செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.

இன்று காலை கேஸ் பயன்படுத்தி அதனை உருகும் போது தீ பரவியது. மளமள வென தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்தது. அருகே இருக்க கூடிய இரண்டு தொழிற் சாலைகளுக்கும் தீ பரவி முழுவதுமாக எரிந்தது. இந்த தீயை அணைக்க அருகே உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. தீ விபத்து காரணமாக கொரட்டூர் ரயில் நிலையம் வரை கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில் தீ அணைக்கப்பட்டது.

The post சென்னை அம்பத்தூர் தனியார் தொழிற்சாலை கிடங்கில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Ambathur Private Factory Warehouse ,Chennai ,Chennai Ambathur ,Battaraivakam ,Ambatore Varuypet ,Amphatur Private Factory Warehouse ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!