×

மேலூர் சேக்கிபட்டி பகுதியில் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

*மாணவர்கள் கோரிக்கை

மேலூர் : மேலூர் அருகே சேக்கிபட்டி பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர் அருகே சேக்கிபட்டி ஊராட்சியில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு சேக்கிபட்டி மட்டுமின்றி சுற்றியுள்ள பட்டூர், கேசம்பட்டி, கம்பூர் ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 780 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிக்கு காலை நேரத்தில், பணிக்கு செல்லும் சில பெற்றோர் மாணவர்களை தங்கள் டூவீலரில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இத்துடன் காலை நேரத்தில் 40க்கும் மேற்பட்ட பஸ்கள் அவ்வழியாக வந்து செல்வதால், மாணவர்கள் பள்ளிக்கு சிரமமின்றி வந்து விடுகின்றனர். அதேநேரம் மாலையில் பள்ளி விடும் நேரத்தில் ஒரு அரசு டவுன் பஸ் மற்றும் ஒரு தனியார் பஸ் மட்டுமே இவ்வழியாக செல்கிறது.இதனால் பஸ்கள் மூலம் வரும் சுமார் 400 மாணவ, மாணவியர் இந்த 2 பஸ்களை மட்டுமே நம்பி உள்ளனர்.

ஒரே நேரத்தில் பஸ்களில் அடித்து, பிடித்து ஏறுவதும், படியில் தொங்கியபடி ஆபத்தாக செல்வதும் இங்கு தினசரி நடக்கும் அரங்கேறுகிறது. சில ஆண்டுங்களுக்கு முன்பு இப்படி படியில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் இங்கு நடந்துள்ளது. இதனால் பள்ளி விடும் நேரத்திற்கு சிறிது நேரம் முன்னதாக சென்று விடும் பஸ்சை, பள்ளி விட்ட பிறகு இயக்க வேண்டும் என்றும், மேலும் மாணவர்கள் வசதிக்கு கூடுதலாக ஒரு பஸ்சை இந்த வழித்தடத்தில் மாலை நேரத்தில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேலூர் சேக்கிபட்டி பகுதியில் பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Shekhipatti ,Mallur ,Malore ,Sekhipatti School ,Mallur Sekhipatti ,Dinakaran ,
× RELATED கொரியர் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி...