×

விராலிமலையில் பாழடைந்து கிடக்கும் காவலர் குடியிருப்பு இடித்து அகற்றப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விராலிமலை : விராலிமலையில் மிகவும் பாழடைந்து பயன்பாடற்ற நிலையில் இருக்கும் காவலர் குடியிருப்பை இடித்து அகற்றிவிட்டு அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.விராலிமலையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் வேறு இடம் மாற்ற வேண்டி உள்ளதால் வாடகை கட்டிடம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேபோல், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட், 11 ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டும் வாடகை கட்டிடம் கிடைக்காததால் நீதிமன்றம் அமைக்க முடியாத நிலை உள்ளது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. (மாவட்டத்திற்குள் அரசாணை வெளியிடப்பட்ட கந்தர்வகோட்டை, பொன்னமராவதி,கறம்பக்குடி ஆகிய 3 இடங்களில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.)

இதுபோன்று, கைவிடப்பட்ட கட்டிடங்களை கண்டறிந்து அதை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி அரசு அலுவலகம் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்ட உடன் புதிய வளாகம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு கட்டத்தொடங்கியிருந்தால் இந்நேரம் நீதிமன்றத்திற்கு ஏற்ற வகையிலான வரைபடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நீதிமன்றம் தன் செயல்பாட்டை தொடங்கியிருக்கும் இன்னும் வாடகை கட்டிடம் தேடவேண்டிய நிலை வருவாய்த்துறைக்கு இருந்திருக்காது.

இதேபோல் கைவிடப்பட்ட கால்நடைகள், அனுமதியின்றி அடுத்த வயல்வெளிகளில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளை அடைத்து வைக்க காவல் நிலையம் அருகே ஒரு காலத்தில் செயல்பட்டு வந்த கால்நடை கொட்டறை இன்று பயன்பாடில்லாமல் விஷ ஜந்துக்கள் மண்டி கிடப்பதோடு அக்கம் பக்கம் குடியிருப்பு வாசிகளை அச்சப்படுத்தி வருகிறது அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு தற்போது அலுவலகம் தேடி அலையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் பெற்று புதிய கட்டிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடம் வலுத்து வருகிறது.விராலிமலையில் மிகவும் பாழடைந்து பயன்பாடற்ற நிலையில் இருக்கும் காவலர் குடியிருப்பை இடித்து அகற்றிவிட்டு அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post விராலிமலையில் பாழடைந்து கிடக்கும் காவலர் குடியிருப்பு இடித்து அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Viralimalayas ,Dinakaran ,
× RELATED இலுப்பூர் அருகே மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்