×

மேகமூட்டத்துடன் பசுமை போர்த்திய மலை

வால்பாறை : வால்பாறை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக வனப்பகுதிகள் பசுமையாக உள்ளது கண்களுக்கு விருந்தாக உள்ளன. வால்பாறை பகுதியில் மே முதல் வாரம் வரை கடும் வெயில் தாக்கத்தால் வனப்பகுதிகள் காய்ந்து பசுமை இழந்து காணப்பட்டது. இதனால் வன விலங்குகள் மேய்ச்சல் இன்றி இடம் பெயர்ந்தது.

குறிப்பாக கடல் மட்டத்திற்கு மேல் 600 மீட்டர் உயரம் வரை உள்ள வனப்பகுதிகள் கடும் வெயில் தாக்கத்திற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் வசித்த வனவிலங்குகள் கடல் மட்டத்திற்கு மேல் 600 மீட்டருக்கு மேல் உயரம் உள்ள வனப்பகுதிகளில் தஞ்சம் புகுந்தன.

இந்நிலையில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன் மாதம் முதல் பெய்து வரும் சாரல் மழையால் ஆழியார் முதல் அட்டகட்டி வரையிலான வனப்பகுதிகள் பசுமையாக இருக்கிறது. புதிய புல்கள் மற்றும் மரங்களில் புதிய துளிர்கள் விடுவதாலும் குரைக்கும் மான், மிளா, வரையாடு உள்ளிட்ட விலங்குகள் மீண்டும் அப்பகுதிக்கு திரும்புகிறது. வால்பாறை பகுதியில் வனப்பகுதிகள் மழையால் செழிப்படைந்து உள்ளதால் பச்சை பசேல் என காணப்படுகிறது.

The post மேகமூட்டத்துடன் பசுமை போர்த்திய மலை appeared first on Dinakaran.

Tags : Walbara ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...