×

கடமலை மயிலை ஒன்றியத்தில்‌ சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி, வாழை சாகுபடி

*விவசாயிகள் தீவிரம்

வருசநாடு : தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இங்கு நெல், பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வரிசையில் ஏலம், மிளகு, காபி, ஆரஞ்சு, மா, சப்போட்டா, கொய்யா, இலவு விவசாயம் நடக்கிறது.

விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மகளிர் மேம்பாடு என அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் உள்ளாட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும், நீர்நிலை மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றியத்திலும் ரூ.பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் மூலம், துல்லிய பண்ணை திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை கடைபிடிக்கும் தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6000 மானியம் வழங்கப்படுகிறது. உழவர் சந்தைகளில் காய்கறி பயிர்களின் வரத்தை அதிகபடுத்தும் நோக்கில் காய்கறி பயிர்செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8000 மானியம் வழங்கப்படுகிறது. தென்னை பயிரில் வழை ஊடுபயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,500 மானியம் வழங்கப்படுகிறது. வாழையில் ஊடுபயிராக காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியங்கள் அனைத்தும் நடவு பொருளாகவும், இடு பொருளாகவும், பணமாகவும் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.

கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, பொன்னன்படுகை, தங்கம்மாள்புரம், உப்புத்துறை, தும்மக்குண்டு, பின்னத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, தென்னை, வாழை, எலுமிச்சை, உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விவசாய பயிர்களை ஊக்குவிக்கும் வகையில் கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல், சூறைக்காற்று போன்றவற்றால் தக்காளி ,வாழை, தென்னை சாகுபடி அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக பருவமழை காலம் தவிர மற்ற நேரங்களில் தக்காளி, தென்னை, வாழை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையால் மகசூலில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடமலைக்குண்டு தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று சாகுபடி பற்றியும் சொட்டுநீர் பாசனம் அமைப்பது குறித்து விளக்கி வருகின்றனர். இதனால் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளானர்.

The post கடமலை மயிலை ஒன்றியத்தில்‌ சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி, வாழை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Kadamalai ,Manila Union ,Theni District ,Dinakaran ,
× RELATED வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?