×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆந்திரா விரைந்தது சிபிசிஐடி போலீஸ்..!!

ஆந்திரா: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி காவல்துறையினர் ஆந்திரா விரைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இந்த வழக்கு சிபிசிஐடி, விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி, ஏடிஎஸ்பி, முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி காவல்துறையினர் ஆந்திரா விரைந்துள்ளனர். கோடநாடு கொள்ளை சம்பவம் நடந்த மறுநாள் சயான் மற்றும் கனகராஜ் ஆந்திராவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் தங்கியிருந்ததாக தகவல் வெளியானது.

கொள்ளை நடந்த 2017 ஏப்ரல் 24க்கு பிறகு 25, 26 தேதிகளில் ஆந்திராவில் சயான், கனகராஜ் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திம்பம் மலைப்பாதை வழியாக சயான், ஓட்டுநர் கனகராஜ் ஆந்திரா சென்றதாக சிபிசிஐடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி காவல்துறையினர் ஆந்திரா விரைந்துள்ளனர். சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே கர்நாடகா குஜராத் மாநிலங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆந்திராவிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆந்திரா விரைந்தது சிபிசிஐடி போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,CPCIT Police ,Kodanadu ,Nilgiri District ,Kothagiri ,CBCID Police ,
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...