×

மாவட்ட அளவில் தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

 

திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் மாவட்ட அளவிலான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நேற்று கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர் ஜெகதீஸ்குமார், உலக சுகாதார அமைப்பை சார்ந்த மருத்துவர் ஆஷா மற்றும் மருத்துவர் வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது: இந்திர தனுஷ் திட்டம் விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 5 வயது குழந்தைகள் வரை மற்றும் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1342 குழந்தைகள் மற்றும் 132 கர்ப்பிணி பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்று எதிர் வரும் ஆகஸ்ட் 7 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் இந்த விவரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்டல் மூலம் பதிவு செய்ய மருத்துவ துறையினருக்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post மாவட்ட அளவில் தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Indra ,Dhanush ,Tirupur ,Dinakaran ,
× RELATED இந்த வார விசேஷங்கள்