×

கல்லூரி நிறுவனச் செயலர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கம்பம், ஜூலை 29: கம்பம் ஸ்ரீ ஆதி கஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனச்செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ரேணுகா வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பின கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பொன்னுராம், சக்திவடிவேல் கல்லூரியின் இணைச்செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வாழ்த்துரை வழங்கினர்.

பேர்லேண்ட் பள்ளி தாளாளர் விநாயகமூர்த்தி, தலைவர் தீபலட்சுமி வாழ்த்திப்பேசினர். துறைத் தலைவிகள் மற்றும் மாணவிகள் எம்எல்ஏவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவிகள் காணொலி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர். இதையடுத்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தாம் கடந்து வந்த பாதைகளின் நினைவுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரியின் பேரவை உறுப்பினர் ஷிர்மிளா அவர்கள் நன்றி கூறினார்.

The post கல்லூரி நிறுவனச் செயலர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kampam ,Ramakrishnan ,MLA ,Sri Adi Kanchanagiri Women's College ,Dinakaran ,
× RELATED கம்பம் பகுதியில் அறுவடை முடிந்த...