×

10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

 

மல்லசமுத்திரம், ஜூலை 29: மல்லசமுத்திரம் அருகே மாமுண்டியில் நடைபெற்ற ஏலத்தில் ₹10 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையின் மாமுண்டி உபகிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. மதியம்பட்டி, மாமுண்டி, அக்கரைப்பட்டி மற்றும் வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 415 மூட்டை பருத்தியை கொண்டு வந்து குவித்தனர். சுரபி ரகம் குவிண்டால் 7380 முதல் 7986 வரையிலும், பி.டி. ரகம் 6320 முதல் 6280 வரையிலும் ஏலம் போனது.

ஆக மொத்தம் 10 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. அடுத்த ஏலம் வரும் 4ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியில் இருந்து 75 மூட்டை கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் 72.25 முதல் 79.55 வரையிலும், இரண்டாம் தரம் 58.75 முதல் 70.25 வரையிலும் ஏலம் போனது. இதன் மூலம் 2.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக சங்க செயலாளர் கணேசன் தெரிவித்தார்.

 

The post 10 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Mamundi ,Tiruchengode Agriculture ,Dinakaran ,
× RELATED மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா