×

கே.எஸ்.அழகிரி கீழே விழுந்து காயம்

சிதம்பரம்: நடை பயிற்சியின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கீழே விழுந்து காயமடைந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருப்பணிநத்தம் கிராமத்தில் உள்ள வீட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது எதிர்பாராமல் கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது இடுப்பு பகுதியில் ஜவ்வு பாதிக்கப்பட்டுள்ளதும், இடது முழங்கால், நெற்றிப்பகுதியில் சிறு காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருப்பணிநத்தம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

 

The post கே.எஸ்.அழகிரி கீழே விழுந்து காயம் appeared first on Dinakaran.

Tags : KS Alagiri ,Chidambaram ,Tamil Nadu Congress ,President ,KS Azlagiri ,Cuddalore district ,K.S.Azhagiri ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் ஸ்டாலின் அலைதான் வீசுகிறது