
- மோடி
- பாஜக
- சீமான் கட்டாம்
- வாடிப்பட்டி
- பாஜா
- சீமான்
- நாதம் தமிழர் கட்சி
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- மதுரை
- பிரதமர் மோடி
- தின மலர்
வாடிப்பட்டி: பிச்சைக்கார நாடாக்கியதுதான் பாஜவின் சாதனை’ என்று சீமான் தெரிவித்தார். மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஆட்சியின் சாதனை குறித்து ஒரு லட்சம் புத்தகம் வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார். ஏதாவது ஒரு சாதனையாவது அவர்களால் கூற முடியுமா? அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்தது, கார்ப்பரேட் நிறுவனங்களுடைய கடனை தள்ளுபடி செய்தது. ஒரே இரவில் பணத்தை செல்லாது என்று கூறியது தவிர்த்து வேறென்ன சாதனை செய்துள்ளனர்? மீண்டும் 2000 நோட்டு கொண்டு வந்தனர். தற்போது அதுவும் செல்லாது என தெரிவித்துள்ளனர்.
இவர்களை (பாஜ) நம்பி நாட்டை ஒப்படைத்தோம். பிச்சைக்கார நாடாக மாற்றி விட்டனர். தற்போது தமிழகத்தை (அண்ணாமலை பாதயாத்திரை) மட்டும் எப்படி தலை நிமிர செய்ய முடியும்? மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு காரணங்களால் உலகளவில் தலை குனிந்து நிற்கும் இந்தியாவில் இவர்களால் தமிழகத்தை மட்டும் எவ்வாறு தலை நிமிர செய்ய முடியும்? ஒரு நாட்டையே தலைகுனிய விட்டுவிட்டு தற்போது ஒரு மாநிலத்தை காப்பாற்றுவேன் என்றால் என்ன அர்த்தம். எனக்கு தெரிந்து இதுவரை இந்தியாவை ஆண்டவர்களில் மோடி தான் ஒர்ஸ்ட் பிரதமர். இவ்வாறு பேசினார்.
The post தனியாருக்கு விற்பனை, கடன் தள்ளுபடிதான் பாஜ செய்த வேலை பிச்சைக்கார நாடாக்கியதுதான் பிரதமர் மோடியின் சாதனை: சீமான் காட்டம் appeared first on Dinakaran.