×

மருத்துவ குணம் மிக்க 10 கிலோ கத்தாழை மீன் ரூ.48,900க்கு ஏலம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மற்றும் பெரியக்கடைத்தெரு மீன் மார்க்கெட்களில் அலையாத்திக்காடு பகுதிகளில் வளரக்கூடிய மீன் வகைகள் விற்பனைக்கு வரும். இந்த வகை மீன்கள் அதிக ருசி கொண்டவையாகும். இதில் கற்றாழை வகை மீன்கள் எப்போதும் ஒரு கிலோ ரூ.4000 வரை ஏலம் போகும். இந்த மீனில் மருத்துவ குணம் கொண்ட நெட்டி இருப்பதால் இவ்வாறு அதிக விலை போவது வழக்கம். இந்நிலையில் நேற்று அலையாத்திகாடு நிறைந்த லகூன் பகுதியிலிருந்து 10 கிலோ எடை கொண்ட 3 ஆண் கத்தாழை மீன்கள் ஆசாத்நகர் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது.இந்த கத்தாழை மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். ஆரம்ப விலை ரூ.30 ஆயிரத்திற்கு தொடங்கி, கடைசியில் ரூ.48 ஆயிரத்து 900க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை பார்க்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு கத்தாழை மீன் ஏலம் எடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post மருத்துவ குணம் மிக்க 10 கிலோ கத்தாழை மீன் ரூ.48,900க்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Alayathikkadu ,Asadnagar ,Periyakkadai ,Thiruvarur district ,Muthupet ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு