×

தனியார் தொழிற்சாலையில் பணியிட பாதுகாப்பு குறித்து பயிற்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் பூந்தமல்லி ஒன்றியம், குத்தம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள யுனைடெட் மதுபான தொழிற்சாலையில் பணியிட பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பாதுகாப்பு பயிற்சி வகுப்பிற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் குமார் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் திவ்யா முன்னிலை வகித்தார். தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு அலுவலர் செந்தில் அனைவரையும் வரவேற்றார்.

இணை இயக்குநர் குமார் பணியிட பாதுகாப்பின் முக்கியத்துவம், தொழிற்சாலையில் விபத்தில்லா சூழலை உறுவாக்குவது குறித்து எடுத்துரைத்தார். மேலும் சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் (பயிற்சி) பிரேமகுமாரி பணியிட பாதுகாப்பு, எலக்ட்ரிக்கல் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு கருவிகளை அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், இயந்திரங்களை பாதுகாப்பாக கையாளும் முறை, தொழிற்சாலை பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் தொழிற்சாலை மேலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

The post தனியார் தொழிற்சாலையில் பணியிட பாதுகாப்பு குறித்து பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Poonthamalli Union ,Tiruvallur Industrial Safety and Health Department ,United ,Kutthambakkam Currachi ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி