×

ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம்

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த காவாங்கரையில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ராஜா- செங்குழி தம்பதியினரின் மகன் விஷால். இவர் அம்பத்தூரில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சக நண்பர்களுடன் திருவள்ளூரில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, சென்னைக்கு செல்ல புறநகர் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். அப்போது, திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். இதில், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து இறங்கும் போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில், தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். அவருக்கு தலையில் 20க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

The post ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vishal ,Kavankarai ,Senggunram ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி