
- கோவிந்தராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுவாஷ் பாரத் இயக்கம்
- Kummidipoondi
- டி.ஜே கோவிந்தராஜன்
- கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பிடிஒ அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் 25 ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தெருக்களில் சைக்கிள் சென்று குப்பைகளை பெற்றுக் கொண்டு, குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம். இதனை அறிந்த தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15வது நிதி குழு மானியம் சார்பில் ஒரு பேட்டரி வாகனம் விலை ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் விகிதத்தில் பேட்டரி வாகனங்களை ஏற்கனவே 10 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, மேலும் கிழ்முதலம்பேடு, மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, தேர்வாய், எகுமதுரை, ஆரம்பாக்கம், பல்லவாடா, அயநெல்லூர், ரெட்டம்பேடு, சுண்ணாம்பு குளம், சிறுபுழல்பேட்டை, பாதிரிவேடு, செதில்பாக்கம், சாணபுத்தூர் உள்ளிட்ட 25 ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா நேற்று பிடிஒ அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ரவி ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், பொறியாளர் ஐசேக், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், சாரதா முத்துசாமி, ஒன்றிய கவுன்சிலர் கம்யூனிஸ்ட் ரவி, மணிமேகலை கேசவன், ஜெயச்சந்திரன, மெய்யழகன், ஒன்றிய செயலாளர் மணிபாலன், பேருர் செயலாளர் அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுண்ணாம்புகுளம் ரவி, நமச்சிவாயம், தேர்வாய் முனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, சிறப்பாக அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டார். பின்னர், தூய்மை பணியாளர்களுக்கு 25 பேட்டரி வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
கோவிந்தராஜன் பேசுகையில், கொரோனா காலங்களில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினர். அவர்கள் இல்லை என்றால் ஊராட்சி இல்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதுமே தூய்மை பணியாளர்கள் நினைத்துக் கொண்டுதான் திட்டங்களை அறிவிக்கின்றார் அது மட்டுமல்ல உரிமைத்தொகை வழங்குவதற்காக ஆங்காங்கே ஊராட்சிகளில் சிறப்பு முகாம்களில் படிவத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் திமுக அரசு மட்டும் செய்ய முடியும் என பேசினார். இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்களும் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post தூய்மை பாரத இயக்கம் சார்பில் 25 ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனம்: கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.