×

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆலந்தூர்: நங்கநல்லூரில் அதிமுக ஆட்சியின்போது நிறுத்தப்பட்ட 2 பேருந்துகள் சேவை இயக்கத்தினை மீண்டும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நங்கநல்லூர் இந்து காலனி பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை செல்லும் (தடம் எண்: எம்18என்) மற்றும் நங்கநல்லூரில் இருந்து திருவான்மியூர் வரை செல்லும் (தடம் எண்: எம்1ஏ) ஆகிய 2 பேருந்துகள் சேவை, கடந்த அதிமுக ஆட்சியின்போது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த 2 பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நலச்சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் அமைச்சர், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இந்த 2 பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்தது கழகம் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நங்கநல்லூரில் இருந்து இந்த பேருந்துகள் சேவையை மீண்டும் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். இதில் அமைச்சா தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் தி.நகரில் இருந்து பட்டூர் செல்லும் (தடம் எண்: 154பி) என்ற பேருந்து சேவையும் நங்கநல்லூரில் இருந்து இயக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாமன்ற உறுப்பினர் தேவி ஜேசுதாஸ், வணிகர் நலவாரிய உறுப்பினர் ஜெயராம் மார்தாண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.கே.இப்ராகிம், ஆர்.டி.பூபாலன், முன்னாள் கவுன்சிலர்கள் உலகநாதன், சீனிவாசன், பாண்டிச்செல்வி வெள்ளைச்சாமி, ஜெ.நடராஜன், ஜெகதீஸ்வரன், நலச்சங்க நிர்வாகிகள் அய்யம்பெருமாள், குமாரவேலு, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Minister ,D. Mo. Anparasan ,Nanganallur ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...