ஆவடி: ஆவடியை அடுத்து அயப்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் மூன்று புதிய வகுப்பறை ரூ.54 லட்சம் மதிப்பிட்டிலான கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டு ரூ.6.98 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய் மற்றும் தார் சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தவர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு மற்றும் தனியார் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவி – மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, ஒன்றிய குழு தலைவர் கிரிஜா, துணைத் தலைவர் ஜே.ஞானப்பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர், வினோத், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், துணைத் தலைவர் யுவராசா, வார்டு உறுப்பினர்கள் அந்தோணி தியாகராஜன், லீமா, கவிதா, செல்வகுமார், உமா, உமாமகேஸ்வரி, பாபு, கரன்சிங், பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் ரூ.7.52 லட்சத்தில் திட்ட பணிகள் தொடக்கம்: எம்பி, அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.