×

காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்: ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் காட்டுப்பள்ளி காலாஞ்சி பேவர் பிளாக் சாலை, செட்டிகுளம் சீரமைத்தல், காட்டுப்பள்ளி குப்பத்தில் மீன் உலர்த்தி தளம் உள்ளிட்ட பணிகள் செய்ய பூமி பூஜை நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் துணைத் தலைவர் வினோதினி வினோத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், வார்டு உறுப்பினர் டில்லி பாபு எல்லமுத்து, ஜெயம் பார்த்திபன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர் கிராம நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜேந்திரன், ராதா, பார்த்திபன், பாபு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்: ஒன்றிய பெருந்தலைவர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kattupalli ,Union ,Ponneri ,Kattupalli Panchayat ,Meenjoor Union ,Kalanchi ,
× RELATED சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்