×

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சியினர் தர்ணா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக உள்ளிட்ட எதிர் கட்சி கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டரங்கில், மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள கவுன்சிலர்களுக்கான மாதந்தோறும் மாதந்திர கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு தேவையான முக்கிய அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 35 உறுப்பினர்கள் திமுகவினரும், மீதமுள்ள 16 நபர்கள் அதிமுக, பாஜக, பாமக, தாமக உள்ளிட்ட எதிர்கக்கட்சிகள் கவுன்சிலர்கள் உள்ளனர்.

மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி 16 உறுப்பினர்கள் வார்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை, கருப்பு சேலையில் வந்து கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு கூட்டத்திற்கு வந்தனர். மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் காலதாமதமாக தொடங்கியதால் அதிமுகவினர்கள் கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். மேலும், இதனை கண்டித்து திமுகவை சேர்ந்த திமுக கவுன்சிலர்களும் எதிர்கோஷம் போட்டதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மணிப்பூர் வீடியோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் குழுவில் கவுன்சிலர் ஒருவர் பதிவிட்டார். உடனே, அதிமுக கவுன்சிலர் இது ஆபாச வீடியோ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வெளிநடப்பு செய்து மன்றத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில், தமிழக முதல்வர், மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கி உள்ளார், இதற்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மன்றம் நன்றி தெரிவிப்பது என்று மேயர் தீர்மானத்தை கொண்டு வந்து வாழ்த்தி பேசினார். இதற்கு, நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்து தான் என்று எதிர்க்கட்சி கவுன்சிலர் பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் எங்கள் தலைவர் பாரபட்சம் இன்றி பணியாற்ற கூடியவர்’ என்று மேயர் மகாலட்சுமியுவராஜ் பேசினார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் மேஜையை கைதட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நடப்பதை ஒட்டிபாதுகாப்பு பணிக்கு 10க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

The post காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சியினர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : kanchipuram municipal ,Kanchipuram ,Dharna ,Kanchipuram Corporation ,Tarna ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...