×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் பட்டு, பருத்தி, கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், கைத்தறி சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், விசைத்தறி சேலைகளால், கைத்தறி பட்டு சேலைகள் விற்பனை பாதிக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து விசைத்தறியில் கைத்தறி பட்டு ரகங்களை உற்பத்தி செய்து, தமிழ்நாட்டில் சந்தைப்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி ரக சேலைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளர் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உற்பத்தி செய்து தேங்கியுள்ள சேலைகளை தனியார் மற்றும் கூட்டுறவு நிலையங்களில் அரசே குறைந்த லாபத்துடன் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Handloom ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...