×

திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

திருக்கழுக்குன்றம்: திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (29). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பத்தைச் சேர்ந்த ஹரினி (21). இருவருக்கும் கடந்த ஜூன் 29ம் தேதி சென்னை வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. ஆடி மாதம் என்பதால் ஹரினி சென்னையிலிருந்து தாய் வீடான மெய்யூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டார். ஹரினியின் தாய் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்துள்ளார்.

மேலும், தந்தை ரவி சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் ஹரினி புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் ஹரினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி ஒரு மாதமேயானதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தவிடப்பட்டுள்ளது.

The post திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Tags : RTO ,Thirukkalukkunram ,Vasantakumar ,Ayodhya Kuppa, Chennai ,
× RELATED சமூகவலை தள பக்கத்தில் வைரல் சாலையில்...