×

பாமக நிறுவனர் பிறந்தநாள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சியில் மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமை தாயகம் சார்பில், மறைமலைநகர் பாமக நகர செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் நகர தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் தலைமையில், இப்பள்ளியின் சுற்று சுவர்களுக்கு பசுமை வண்ணம் பூசப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம், பாமக மாவட்ட செயலாளர் காயர் ஏழுமலை, தலைமை ஆசிரியர் மாலினி ஆசிரியகள், பசுமைத்தாயாக மாவட்ட செயலாளர் செந்தில் நாத் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்,பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினர். அதனை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், பாமக மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், நகரதலைவர் சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட, நகர வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பாமக நிறுவனர் பிறந்தநாள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Bama ,Chengalpattu ,Melroshapuram ,CSI Higher Secondary School ,Thiramalaynagar Municipality ,Bamaka ,Ramadoss ,Dinakaran ,
× RELATED 7ம் தேதி பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்