×

சில்லிபாயிண்ட்..

* வட கிழக்கு மண்டல அணியுடனான தியோதர் கோப்பை போட்டியில் தென் மண்டலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வட கிழக்கு மண்டலம் 49.2 ஓவரில் 136 ரன் ஆல் அவுட்; தென் மண்டலம் 19.3 ஓவரில் 137/1 (ரோகன் குன்னும்மால் 87*, மயாங்க் அகர்வால் 32, ஜெகதீசன் 15*).

* வடக்கு மண்டலத்துடன் மோதிய கிழக்கு மண்டலம் 88 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கிழக்கு மண்டலம் 50 ஓவரில் 337/8 (பராக் 131, குஷாக்ரா 98); வடக்கு மண்டலம் 45.3 ஓவரில் 249 ரன் ஆல் அவுட் (அபிஷேக் ஷர்மா 44, ஹிமான்ஷு ராணா 40, நிதிஷ் ராணா 27, மன்தீப் சிங் 50, ரோஹில்லா 41).

* 2024 ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடரில் விளையாட பப்புவா நியூ கினியா அணி தகுதி பெற்றுள்ளது. கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணியை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக பிஎன்ஜி அணி இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது.

* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதை பிசிசிஐ செயலர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

* நிறவெறி சர்ச்சையில் சிக்கிய யார்க்‌ஷயர் கவுன்டி கிளப் அணிக்கு 48 புள்ளிகள் குறைக்கப்பட்டதுடன் ரூ.4 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

* செக் குடியரசில் நடக்க உள்ள பிரேகு ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

The post சில்லிபாயிண்ட்.. appeared first on Dinakaran.

Tags : Sillipoint ,South Zone ,Theodar Cup ,North East Zone ,Dinakaran ,
× RELATED சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு...