×

ஜப்பான் ஓபன் பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதியிக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் ஜப்பான் வீரர் வாடனபே கோகியுடன் நேற்று மோதிய லக்‌ஷயா சென் 21-15, 21-19 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 47 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய், உலகின் நம்பர் 1 வீரரான டென்மார்க்கின் ஆக்சல்சன் விக்டருடன் மோதினார்.

ஒரு மணி 16 நிமிடங்களுக்கு நீடித்து கடும் போராட்டமாக அமைந்த இப்போட்டியில் விக்டர் 19-21, 21-18, 21-8 என்ற செட் கணக்கில் வென்றார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி, 15-21, 25-23, 16-21 என்ற செட் கணக்கில் தைவானின் யாங் லீ – சி-லின் வாங் இணையிடம் தோல்வியைத் தழுவியது. இப்போட்டி ஒரு மணி, 10 நிமிடங்களுக்கு நீடித்தது.

The post ஜப்பான் ஓபன் பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென் appeared first on Dinakaran.

Tags : Lakshya Sen ,Japan Open Badminton ,Tokyo ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்