×

என்எல்சி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை: என்.எல்.சிக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கதக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது; என்.எல்.சிக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது. குறுகிய கால அரசியல் லாபத்திற்காக வன்முறை நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்சனை தொடர்பாக என்.எல்.சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியிலான அமைதி போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி தரப்பட்டது. அறவழியில் போராட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. வன்முறைக்கான களத்தை வேண்டுமென்றே உருவாக்குவதை அரசு வேடிக்கை பார்க்காது.
போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. நில உரிமையாளர்களுக்கு ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில்தான் என்.எல்.சி. பணிகளை மேற்கொண்டது. பரவனாறு மாற்றுப்பாதை மிகவும் அவசியம். இப்பாதையில் உள்ள பயிரிடப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டையும் என்.எல்.சி. நிறுவனத்திடம் பெற்றுத் தருவோம். இன்று சில கட்சிகள் விவசாயிகளைக் கேடயமாகப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதன்மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்படி நடப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

The post என்எல்சி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Tags : NLC ,minister gold ,south ,N. l. ,South India ,CU ,Chennai ,South East ,
× RELATED என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன்...