×

அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.2.11 கோடியில் 46 பழங்குடியின குடும்பத்துக்கு வீடு கட்ட பூமி பூஜை: கலெக்டர் பங்கேற்பு

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி அருனோதையா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பிலும், தேசிய அனல் மின் கழக நிறுவனத்தின் சமூக பங்களிப்புடனும் ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 46 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கி பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜி.ரவி முன்னிலை வகித்தனர். துணை தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் வரவேற்றார். விழாவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட்வத்ஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் ஜி.பாலமுரளிதரன், என்.டி.இ.சி.எல். மனிதவள மேம்பாட்டு மேலாளர் அகஸ்டின் ரைமண்ட், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post அத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.2.11 கோடியில் 46 பழங்குடியின குடும்பத்துக்கு வீடு கட்ட பூமி பூஜை: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Attipattu ,Ponneri ,Arunothaya Nagar ,Athipattu ,Meenjoor Union.… ,Athipattu panchayat ,
× RELATED அரசு மேல்நிலை பள்ளியில் ரூ.1.69 கோடியில் கட்டிட பணிக்கு பூமிபூஜை