×

செங்கையில் ராமதாஸ் பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

செங்கல்பட்டு: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு, பாமக மற்றும் பசுமை தாயகம் சார்பில், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட மல்ரோசாபுரம் சிஎஸ்ஐ மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் ஜெ.அரிகிருஷ்ணன், நகர தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், பள்ளி சுற்றுச்சுவர்களுக்கு பசுமை வண்ணம் பூசி, 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், அப்பகுதியில் பசுமை தாயகம் சார்பில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூர் கி.ஆறுமுகம், பாமக மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, பசுமை தாயக மாவட்ட செயலாளர் செந்தில்நாத், பாமக மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், நகர தலைவர் சுரேஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மாலினி, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்கையில் ராமதாஸ் பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Ramdas ,Sengai ,Chengalpattu ,Ramadoss ,Bamaka ,Green Homeland ,Karamalai Nagar ,
× RELATED மதுபோதையில் மாணவர்கள் இரகளை; இளைய...