×

மீண்டும் என்.எல்.சி. வேலையை தொடங்கினால், கடலூர் முழுக்க சாலை மறியல் நடக்கும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

நெய்வேலி: மீண்டும் என்.எல்.சி. வேலையை தொடங்கினால், கடலூர் முழுக்க சாலை மறியல் நடக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தில் நெற்பயிர்களை அழித்துவிட்டு கால்வாய் அமைக்கும் பணியை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலியில் என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு என்.எல்.சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; என்எல்சி ஐந்து கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம்; நீங்கள் வெளியேறுங்கள். என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா? ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை இல்லை. ஒரு பக்கம் விவசாய பட்ஜெட், மறு பக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது; நிச்சயம் இதனை அனுமதிக்க மாட்டேன்.

என்.எல்.சி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இது சாதி பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ இல்லை; இது நம் மண் பிரச்சனை. விளைநிலங்களை பொக்லைன் வைத்து அழிப்பதை பார்த்த என்னால் தூங்க முடியவில்லை. என்.எல்.சி தமிழகத்திற்கு தேவையில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. அமைதியாக நடந்த போராட்டத்தில் காவல் துறையினரால் தான் நிலைமை மாறியது. நிலம் கையகப்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள் என்று கூறினார்.

The post மீண்டும் என்.எல்.சி. வேலையை தொடங்கினால், கடலூர் முழுக்க சாலை மறியல் நடக்கும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Annpurani Ramadas ,Naiveli ,N. l. RC ,Bambaka ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை