மிசோரம்: மிசோரத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் பாஜக உடனான கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மிசோரம் தேசிய முன்னணி கட்சியும் உள்ளது. இந்நிலையில், தனியார் செய்தி தளத்திற்கு பேட்டியளித்துள்ள அந்த மாநில முதலமைச்சர் சோரம்தங்கா, மிசோரமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், கூட்டணியை தக்க வைத்து கொள்ள பாஜக எதையும் செய்ய தயாராக இருக்கும் என்றும் மேலும் தெரிவித்தார். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சோரம்தாங்க கூறினார். மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குக்கி சமூகத்தினர் தங்கள் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும், இதனால் தங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் அணுகி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
The post கூட்டணியில் இருப்பதால் அனைத்தையும் ஏற்கமுடியாது.. பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம்: பொது சிவில் சட்டத்திற்கு மிசோரம் முதலமைச்சர் எதிர்ப்பு appeared first on Dinakaran.