×

சக்காரப்பள்ளி ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு

*இடமாற்றம் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர் : அய்யம்பேட்டை அருகில் உள்ள சக்காரப்பள்ளி ஊராட்சியில் மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள குப்பைகள் மற்றும் குப்பை கிடங்கை வேர் இடத்துக்கு மாற்ற வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் நேற்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி பகுதி உள்ளது. இப்பகுதியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அய்யம்பேட்டை பகுதியில் உள்ள சாதிக் நகர், நிஜாம் நகர், காதரியா நகர், தைக்கால் தெரு, மேலத் தெரு, சுண்ணாம்புகார தெரு, நடுத் தெரு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகின்றனர்.

சாதிக் நகர் பகுதியில் குப்பை கூடம் அமைத்து ஆடு மாடு கழிவுகள், ஊராட்சியில் சேகரமாகும் கழிவுகள் போன்ற குப்பைகளை துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி வாகனங்கள் மூலம் தினமும் இங்கு வந்து கொட்டுகிறார்கள். இங்கு கொட்டப்படும் குப்பைகளை கால்நடைகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி சென்று வருகின்றனர். இதனால் சுகாதாரம் சீர்கேடு ஏற்படுவதுடன் பலநோய்கள் பரவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதனால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் பரவி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு அங்கு குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சக்காரப்பள்ளி ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு appeared first on Dinakaran.

Tags : Garbage ,warehouse ,Sarapalli curb ,Thanjavur ,Sakarappalli curb ,Ayampet ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு விற்பனை அங்காடி விற்பனையாளர் சஸ்பெண்ட்..!!