×

நாமகிரிப்பேட்டையில் பூத்து குலுங்கும் சம்பங்கி

*அறுவடை தீவிரம்

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை பகுதியை சுற்றிலும் மலை குன்றுகள், நீர்நிலைகள் சூழ்ந்துள்ளதால் ஆண்டு முழுவதும் குளர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. இதனால், மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், ஒண்டிக்கடை, திம்மநாய்கன்பட்டி, மத்துருட்டு, வேப்பிலைக்குட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக சம்பங்கி சாகுபடி செய்துள்ளனர். சம்பங்கியை பொறுத்தவரை அதிக செலவில்லமால் 40 நாட்களில் முழு அளவில் மகசூலுக்கு வந்து விடுகிறது. இதன் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இப்பகுதியில் மலைகள், ஏரிகள் சூழ்ந்துள்ளதால், எந்த பயிராக இருந்தாலும் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்ற நிலை உள்ளது. சம்பங்கியில் ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ₹30 ஆயிரம் முதல் ₹40 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு கிலோ சம்பங்கி ₹70 முதல் ₹75 வரை விலை போகிறது. கடந்த வாரம் ₹100 முதல் ₹140 வரை விற்பனையானது.

ஆத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். சேலம் மற்றும் வாழப்பாடி சந்தைக்கு நேரடியாக கொண்டு செல்லும்போது அதிக லாபம் கிடைக்கிறது. ஆடிப்பண்டிகை களை கட்டியுள்ளதால், தற்போது சம்பங்கி பூக்களுக்கான தேவை அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

The post நாமகிரிப்பேட்டையில் பூத்து குலுங்கும் சம்பங்கி appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Namakripettai ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்