×

கர்நாடகாவில் மூட நம்பிக்கையால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்; உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கொடுமை..!!

பெங்களூரு: கர்நாடகாவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் ஒரு குழந்தை மருத்துவமனையில் இறந்த நிலையில் கிராம மக்களின் மூட நம்பிக்கை பழக்கத்தால் மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது. கர்நாடக மாநிலம் துவக்கூறு மாவட்டத்தில் உள்ள மாலாஹள்ளி கொல்லரகட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தேஷ் வசந்தா தம்பதி. கோடக்குள்ளா சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு கடந்த மாதம் 13-ம் தேதி அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். சிகிச்சையில் ஒரு குழந்தை இறந்த நிலையில் தாயும் மற்றொரு குழந்தையும் கடந்த 18-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஆனால், கோடக்குள்ளா சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டால் அந்த பெண் ஊருக்கு வெளியே 60 நாட்கள் குடிசையில் தங்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளதால் வசந்தாவும், அவரது குழந்தையும் கிராமத்திற்கு வெளியே குடிசையில் தங்க வைக்கப்பட்டனர். கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் பச்சிளம் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கிராம மக்களின் மூட நம்பிக்கையால் குழந்தையின் உயிர் பறிபோன நிலையில் குழந்தையை அடக்கம் செய்யவும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தாசில்தார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தையை அடக்கம் செய்து பெண்ணை அவரது வீட்டில் தங்க வைத்தனர்.

The post கர்நாடகாவில் மூட நம்பிக்கையால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்; உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கொடுமை..!! appeared first on Dinakaran.

Tags : Pachila ,Karnataka ,Bengaluru ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...