×

AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து SICCI அமைப்பால் நடத்தப்படும் மெட் டெக் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து SICCI அமைப்பால் நடத்தப்படும் மெட் டெக் கருத்தரங்கினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கினை துவக்கி வைத்து குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது “நோய் நாடி. நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடிவாய்ப்பச் செயல் நோய் என்ன? நோய்க்கு காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்ற திருவள்ளுவர் வாக்கின்படி நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளை அறிந்த தமிழ் சமூகத்தில், மூலிகைகளின் தன்மை அறிந்து, நோய் தீர்த்த சித்த மருத்துவம் தொடங்கி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அலோபதி என்று உலகத்தில் பல்வேறு மருத்துவ முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறைகளில், அறிவியல் அடிப்படையில், ஆய்வுகளின் அடிப்படையில், தரவுகளின் அடிப்படையில், அலோபதி என்கின்ற ஆங்கில மருத்துவ முறையிலேயே உலகமெங்கும் பெருமளவில் சிகிச்சை செய்யப்படுகிறது.

அலோபதி மருத்துவ சிகிச்சை முறைகளில் மருந்து. அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றை தாண்டி இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருவிகளால் மனிதர்களின் நோய்களை உடனுக்குடன் துல்லியமாக கண்டறிந்து, அதற்கு விரைவான சிகிச்சையும் அளிக்க முடிகிறது. இன்று இந்த விழாவில், இருதயம், நரம்பியல், நுரையீரல் போன்ற 12 துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திய மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

விருதுகள் பெறும் மருத்துவமனைக்கும்,மருத்துவர்களுக்கும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலக சுகாதார அமைப்பு 1,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் 854 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற நிலை உள்ளது.வட மாநிலங்களில், குறைந்தபட்சம் 3,000 நபர்களிலிருந்து அதிகபட்சம் 8,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது.

தென் மாநிலங்களான, கேரளா-கர்நாடகா, ஆந்திர ஆகிய மாநிலங்களில் 500 நபருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது.தமிழ்நாட்டில், 253 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத் துறையில் முதல் மாநிலமாக திகழ்வது பெருமைக்குரியது. முதல்வர் கல்விக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் அளிப்பது மருத்துவத் துறை. அரசு மற்றும் தனியார் கோவிட் மையங்கள் மூலம் 12 கோடியே 72 லட்சத்து 21 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி பெற்று பலன் அடைந்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் தடுப்பூசி திட்டத்தின் கீழ்.9 லட்சத்து 15 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள்10 லட்சம் கர்ப்பிணி தாய்மார்கள் பயன் பெற்றுள்ளனர். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக
தடுப்பூசிகள் போட்டு தமிழ்நாட்டு மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றியது கழக அரசு
முதல்வர்” என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

The post AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து SICCI அமைப்பால் நடத்தப்படும் மெட் டெக் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Met Tech ,SICCI ,Moe Andarasan ,Chennai ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...