×

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7வது குழு..!!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் 7வது குழு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7வது குழு இதுவாகும். புளோரிடா மாகாணம் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த குழுவினர் பால்கன் – 9 ராக்கெட் மூலம் புறப்பட உள்ளனர்.

இந்த குழுவில் நாசாவின் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி வீரர் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பானை சேர்ந்த சடோஷி புருகாவா மற்றும் ரஷியாவின் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகிய விண்வெளி வீரர்கள் செல்கின்றனர். அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. அந்தவகையில் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7வது குழு..!! appeared first on Dinakaran.

Tags : International Space Station ,Nasa ,US Space Research Center ,Washington ,Elan ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்