×

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் தர்ணா: தங்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு தரப்பினரை கைது செய்ய கோரிக்கை

திருவள்ளூர்: பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு தரப்பினரை கைது செய்ய கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் நடுவூர் மாதா குப்பம் குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள இருதரப்பு மீனவர் இடையே எல்லை பிரச்சனை நிலவி வருகிறது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில் அண்மையில் ஏரியில் மீன்பிடிக்க பொன்னேரி சார் ஆட்சியர் தடை விதித்த பின்னர் தடையை விலகினார். கடந்த 24-ம் தேதி இருதரப்பும் மோதலில் ஈடுபட்டதை அடுத்து இருதரப்பும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இருதரப்பும் மீனவர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்த இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதால் நடுவூர் மாதாகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் தர்ணாவில் ஈடுப்பட்டனர். கடந்த ஓராண்டாக மீன்பிடிப்பதில் எல்லை பிரச்சனை காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக தெரிவித்த மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள உரிமை தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கடந்த 24-ம் தேதி தங்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரினர்.

The post பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் தர்ணா: தங்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு தரப்பினரை கைது செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Kotaksiyar ,Thiruvallur ,Palavekadu Lake ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...