×

மணிப்பூர் வன்முறைக்கு முடிவு காண இரு தரப்புடனும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை!

டெல்லி: மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு சமூத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வரும் நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற கொடூரம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாகவும் குக்கி மற்றும் மைதேயி பழங்குடியின மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி மணிப்பூரை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் கடந்த ஜூலை 18ம் தேதிக்கு பிறகு எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு சற்று திரும்பி வருகிறது எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் பாதுகாப்பிற்காக சுமார் 35 ஆயிரம் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவித்துள்ளதாகவும், இதுவரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் ஆகியோருக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என்ற தகவலையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு விலைவாசியுயர்வும் ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மாநில அரசுடன் சேர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 7 வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் கருத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

The post மணிப்பூர் வன்முறைக்கு முடிவு காண இரு தரப்புடனும் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : Union government ,Manipur ,Delhi ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...