×

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பணியை நிறுத்தக்கோரி பல இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றதால் இரவு நேர கிராமப்புற சேவைகள் நிறுத்தப்பட்டன. நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேல்வளையமாதேவி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி ஈடுபட்டு வருகிறது.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை என்.எல்.சி. தொடங்கியது முதல் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். முதல் நாளில் 18 அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்த நிலையில் பண்ருட்டியில் கல்வீசுச்சு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யட்டப்பட்டார்.

இந்நிலையில் 2வது நாளாக பூண்டியன்குப்பம், கண்ணாரப்பேட்டை பாலூர் ஆகிய பகுதிகளில் 3 அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை அடுத்து 2வது நாளாக கிராமப்புறங்களுக்கு இரவு நேர பேருந்து சேவையை அரசு போக்குவரத்து கழகம் நிறுத்தியுள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்காக கடலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளை மாற்று வாகனங்கள் மூலம் போலீசார் அனுப்பிவைத்தனர்.

The post நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பணியை நிறுத்தக்கோரி பல இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Neyveli N.L.C. ,Neyveli ,Neyveli Nlc ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ்...