×

பழநி தொப்பம்பட்டியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பழநி, ஜூலை 28: பழநி அருகே தொப்பம்பட்டியில் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒட்டன்சத்திரம் தொகுதி துணை செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை மானபங்கம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதில் மாநில கொள்ளை பரப்பு செயலாளர் பெரியார்மணி, மாநில வழக்கறிஞரணி செயலாளர் சின்னக்கருப்பன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி வள்ளுவ், சுர்ஜித், துணை செயலளர் கார்த்திக் சுதன், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், செல்வவள்ளுவன், செல்லமுத்து, மாவட்ட தொண்டரணி செயலாளர் விருமாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பழநி தொப்பம்பட்டியில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Palani Thopampatti ,Palani ,Tamil Bulis Party ,Thopampatti ,Deputy ,Otansantram Module ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்