×

கஞ்சிக்கோடு வனப்பகுதியில் பெண் யானைக் குட்டி சடலம் மீட்பு

 

பாலக்காடு,ஜூலை28: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு வலியேறி வனப்பகுதியில் ஒரு வயதுடைய பெண் யானைக்குட்டியின் சடலம் நேற்றுமுன் தினம் காணப்பட்டது.
பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு வனப்பகுதியில் காட்டு யானைகளின் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு வயதுடைய குட்டி ஒன்று கடந்த சில நாட்களாக அலைந்து திரிந்து வந்தன. இவற்றை பலமுறை ஊர்மக்கள் பார்த்துள்ளனர். கஞ்சிக்கோடு ஊரை அடுத்த வனப்பகுதியில் புல்களை மேய்ந்தவாறு குட்டியானையை வனத்துறை காவலர்களும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் குட்டி யானை சரிவார தீனி உட்க்கொள்ளாமல் உடல் மெலிவும், சோர்வுடன் காணப்பட்டது. நேற்றுமுன்தினம் மதியம் புதுசேரி செக்‌ஷன் காவலர்கள் வழக்கம்போல் கஞ்சிக்கோடு ஐயப்பன் மலை, வேலஞ்சேரி, வலியேறி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டிருந்த போது யானை குட்டியின் சடலம் வலியேறி மலையோர அடிவாரத்தில் காணப்பட்டது. உடனடியாக வனத்துறை மேல்அதிகாரிகளுக்கு தகவலளித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்தில் குட்டியானையின் சடலத்தை ஆய்வு செய்ததில் காயங்கள் எதுவுமில்லை.வனத்துறை கால்நடை மருத்துவர் டேவிட் இப்ராஹிம் தலைமையில் உடற்கூறு பரிசோதனை நடத்தி யானையின் சடலத்தை உட்காட்டில் அடக்கம் செய்தனர். வாளையார் ரேஞ்சு அதிகாரி ஆஷிக் அலி, புதுசேரி சவுத் செக்‌ஷன் பாரஸ்டர் மருதன், பறக்கும் படை செக்‌ஷன் பாரஸ்டர் சுரேஷ் ஆகியோர் யானையின் சடலத்தை ஆய்வு செய்தனர்.

The post கஞ்சிக்கோடு வனப்பகுதியில் பெண் யானைக் குட்டி சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kanjicode forest ,Palakkad ,Kangikode ,Palakkad district ,Kerala ,Ganiglik ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...