×

மண்டல திட்டக்குழு உறுப்பினருக்கு திமுகவினர் பரிசு வழங்கி வாழ்த்து

 

சின்னமனூர், ஜூலை 28: சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவர் தேனி தெற்கு மாவட்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர். இவரது மனைவி நிவேதா அண்ணாத்துரை சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ளார். தேனி தெற்கு மாவட்டம் திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் எம்எல்ஏ வழிகாட்டுதலில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பரிந்துரையின்பேரில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரையை மண்டல திட்டக்குழு உறுப்பினராக நியமித்து அறிவித்துள்ளார்.

அதன்படி, சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் முத்தையா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சக்திவேல், அப்பிபட்டி (எ) அழகாபுரி ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார் மற்றும் திமுகவினர் நேரில் சந்தித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

The post மண்டல திட்டக்குழு உறுப்பினருக்கு திமுகவினர் பரிசு வழங்கி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DMK ,Zonal Planning Committee ,Chinnamanur ,Annathurai ,Chinna Ouvulapuram ,Theni South District East ,Dinakaran ,
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...