×

தேனியில் சீட்டு நடத்தி பல கோடி மோசடி: பெண்கள் எஸ்.பி.யிடம் புகார்

 

தேனி, ஜூலை 28: தேனியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.பல கோடி மோசடி செய்ததாக ஏராளமான பெண்கள் தேனி மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு நேற்று சுமார் 50 பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் வந்து, எஸ்.பி பிரவின் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு அளித்தனர். இம்மனுவில், தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டியை சேர்ந்த வேலு மற்றும் மகேஸ்வரி தம்பதியினர் தேனியில் சக்தி ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் வடபுதுபட்டியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் சீட்டு போட்டனர். ஆரம்ப காலகட்டத்தில் சீட்டு போட்ட மக்களுக்கு முறையாக பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பணத்தைப் பெற்று விட்டு திரும்பிப் தராமல் நிதிநிறுவனம் ஏமாற்றி விட்டது. இதன்படி, வடபுதுப்பட்டி பகுதியில் மட்டும் ரூ.பல கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து தேனி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தில் செலுத்தியுள்ள பணத்தை திருப்பி பெற்றுத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post தேனியில் சீட்டு நடத்தி பல கோடி மோசடி: பெண்கள் எஸ்.பி.யிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Theni ,S.B. Theni ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்