×

பள்ளத்தில் சிக்கிய நகராட்சி வாகனம்

 

ஆத்தூர், ஜூலை 28: ஆத்தூர் நகராட்சி 12வது வார்டு பகுதியில், குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்று, தாயுமானவர் தெரு வழியாக வந்தது. அப்போது, அங்கிருந்த பள்ளத்தில் பின்சக்கரம் இறங்கியதில் வண்டி கவிழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் பள்ளி பஸ்கள், குழந்தைகள் செல்ல முடியாம சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பள்ளத்தில் விழுந்த வண்டியை அப்புறப்படுத்த முடியாமல் தவித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இங்குள்ள தெருக்களில் இதுபோன்ற பள்ளங்களை சீர் செய்யக்கோரி, நகராட்சியிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், பள்ளி குழந்தைகள், டுவீலரில் செல்வோர், அடிக்கடி பள்ளத்தில் விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. எனவே, பள்ளங்கள் அனைத்தையும், போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்,’ என்றனர்.

The post பள்ளத்தில் சிக்கிய நகராட்சி வாகனம் appeared first on Dinakaran.

Tags : Athur ,Thayumanavar street ,Dinakaran ,
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்