×

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

 

தரங்கம்பாடி, ஜூலை 28: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் 2 சிவாச்சாரியார்களுக்கு தருமபுரம் மடாதிபதி விருது வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வர் திருக்கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் தருமபுரம் லகுருமகா சன்னிதானம் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். மேலும் தருமை ஆதீன வேதசிவாகம பாடசாலை முன்னாள் மாணவர்கள், அமிர்தகடேஸ்வர் சிவாச்சாரியார், சண்முகசுந்தர சிவாச்சாரியார் ஆகியோருக்கு ஆதிசைவ ஆச்சாரியர் சீலர் விருதை வழங்கி வாழ்த்தினர். விழாவில் கோயில் சிவாச்சாரியார்கள், அலுவலக ஊழியர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Sundaramurthy Nayanar Guru Puja Festival ,Tharangambadi ,Sundaramurthy Nayanar Gurupuja ,Thirukkadaiyur Amrithakadeshwar Temple ,
× RELATED மின்னல் தாக்கி மீனவர் பலி