×

ஜப்பான் ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் இந்திய வீரர்கள்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் ஒற்றையர், இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், பிரணாய், சாத்விக், சிராக் ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். டோக்கியோவில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென், ஜப்பானின் சுனேயமா கன்டா ஆகியோர் மோதினர். அதில் சென் 50 நிமிடங்களில் 21-14, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார. மற்றொரு ஒற்றைய பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் மோதினர்.

முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களை 21-9, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் பிரணாய் வசப்படுத்தினார். அதனால் 57நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற செட் கணக்கில் வென்ற பிரணாய் காலிறுதிக்குள் நுழைந்தார்.ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணையும், டென்மார்க்கின் ஜெப்பே பே/லஸ்சே மோல்ஹெட் இணையும் களம் கண்டன. அதில் 36நிமிடங்களிலேயே இந்திய இணை 21-17, 21-11 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அதே நேரத்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டிரீசா ஜோலி/காயத்ரி கோபிசந்த் இணை 21-23, 19-21 என்ற நேர் செட்களில் கடுமையாக போராடி தோற்றது.

The post ஜப்பான் ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் இந்திய வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Japan Open Badminton quarterfinals ,Tokyo ,Japan Open ,Lakshya Sen ,Pranai ,Satvik ,Chirag ,Japan Open Badminton ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்