×

விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை விநியோகம் வேளாண்மை உதவி இயக்குனர் வழங்கினார் படவேட்டில் தேசிய நெல் திருவிழா

கண்ணமங்கலம், ஜூலை 28: படவேடு தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற விவசாயிகளுக்கு 20 பாரம்பரிய நெல் விதைகளை வேளாண்மை உதவி இயக்குனர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 17வது தேசிய நெல் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு பேராசிரியர் துரைசிங்கம் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் கருணாகரன், உதவி பேராசிரியர் சுரேஷ்வர்மா முன்னிலை வகித்தனர். இயற்கை விவசாயி கவியரசன் வரவேற்றார். விழாவில், போளூர் உதவி வேளாண்மை இயக்குனர் சவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக விளக்கி கூறினார். அப்போது, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பின்னர், 20 வகையான பாரம்பரிய விதை நெல், 10 வகையான ஆடிப்பட்ட விதைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார். தொடர்ந்து, இயற்கை உணவே அருமருந்து, நமது நெல்லை காப்போம் என விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பாரம்பரிய மதிய உணவு பறிமாறப்பட்டது. முடிவில் விவசாயி முருகன் நன்றி கூறினார்.

The post விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை விநியோகம் வேளாண்மை உதவி இயக்குனர் வழங்கினார் படவேட்டில் தேசிய நெல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Agriculture National Paddy Festival ,Pataved ,Kannamangalam ,Patavedu National Paddy Festival ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே