×

மருத்துவக்குழு ஆலோசனை: விலகினார் சிராஜ்

மும்பை: பிசிசிஐ மருத்துவக்குழு ஆலோசனையின்படி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து சிராஜ் விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் வேகம் முகமது சிராஜ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இ டம் பிடித்திருந்தார். சுழலுக்கு சாதகமாக இருந்த முதல் டெஸ்ட்டில் 18ஓவர்களை வீசி 2 விக்கெட் வீழ்த்தினார் சிராஜ். தொடர்ந்து மழை காரணமாக டிரா ஆன 2வது டெஸ்ட்டில் 31.4ஓவர்கள் வீசி 5விக்கெட்களை அள்ளினார். அவர் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்சின் போது கணுக்கால் வலி காரணமாக பந்து வீச முடியாமல் அவதிப்பட்டார்.

இந்நிலையில் நேற்று தொடங்கிய ஒருநாள் தொடரில் இருந்து சிராஜ் திடீரென விலகியுள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரை ஓய்வில் இருக்கும்படி வலியுறுத்தியதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. ஒருநாள் உலக கோப்பை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷமி ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றனர். அதனால் மற்றொரு முக்கிய வேகப்பந்து வீச்சாளரான சிராஜிக்கும் பாதிப்பு அதிகமாகமல் இருக்க பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிராஜிக்கு பதிலாக மாற்று வீரர் யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனத்கட், உம்ரன் மாலிக், முகேஷ் குமார் என 4 வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

The post மருத்துவக்குழு ஆலோசனை: விலகினார் சிராஜ் appeared first on Dinakaran.

Tags : Medical Board ,Siraj ,Mumbai ,ODI ,West Indies ,BCCI medical committee ,Board ,Siraj Quits ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!