×

வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.41 கோடி மோசடி பெண் வக்கீல் கைது

தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அப்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பகவதிராஜ். இவர் தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கிறார். இவர் கடந்த 2019ல் கேரளாவில் எஸ்டேட் வாங்க விரும்பி ரூ.2 கோடியே 92 லட்சம் செலுத்தியிருந்தார். இதற்காக வங்கிக் கடன் பெற முயற்சித்து வந்தார். தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த சித்ரா (52), வங்கிகளுக்கான சட்ட ஆலோசகர் என்பதால் அவரை பகவதிராஜ் வங்கிக்கடன் பெற அணுகியுள்ளார். இதற்கு சித்ரா இரு தவணைகளாக பகவதிராஜிடம் இருந்து ரூ.24.90 லட்சம் பெற்றுள்ளார். ஆனால் வங்கிக்கடன் பெற்றுத் தரவில்லை.

இதனையடுத்து பகவதிராஜ் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார், வக்கீல் சித்ரா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சித்ரா ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 7 பேருக்கு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு தேனியில் சித்ராவை கைது செய்தனர்.

The post வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.41 கோடி மோசடி பெண் வக்கீல் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Bhagavathyraj ,Appipatti ,Uttampalayam, Theni district ,Madipakkam, Chennai ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்