×

அவசர மருத்துவ உதவிக்கு என கேட்டு பேடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்வதாக பணம் மோசடி; இளம்பெண் கைது

தாம்பரம்: தாம்பரம் அருகே கவர்ச்சியாக உடை அணிந்து நூதன முறையில் பேடிஎம் மூலம் பணம் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம், அய்யன்சேரி பகுதியை சேர்ந்தவர் ஷெரில் (20). இவர், தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் பரிவர்த்தனை செய்யும் செல்போன் கடைகளுக்கு சென்று, தனக்கு உடனடி மருத்துவ தேவை இருப்பதாக கூறி, தான் சொல்லும் எண்ணிற்கு பணம் பரிவர்த்தனை செய்யுங்கள் என கேட்டுள்ளார். பிறகு பணம் அனுப்பியவுடன் ரொக்கமாக பணத்தை கொடுக்காமல் பேடிஎம் மூலம் க்யூஆர் ஸ்கேனர் மூலம் பணத்தை அனுப்புவதாக தெரிவித்து பலரை ஏமாற்றியுள்ளார்.

அந்த பெண் ஒரு சிலரிடம், தான் வாங்கிய பணத்திற்கு போலியாக செல்போன் ஸ்கீரீன் ஷாட்டை காண்பித்துவிட்டு, காதலன் தயாராக இருக்கும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். தாம்பரத்தில் உள்ள செல்போன் கடையில் இதே பாணியில் ஏமாற்ற முயன்றபோது கையும் களவுமாக சிக்கிய அவரை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சேலையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணை கைது செய்து போலீசார் நடத்திய விசாரனையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், ஊரப்பாக்கத்தில் தனது சகோதரனுடன் தங்கி வந்ததும் இரண்டு மாதத்திற்கு முன்னர் சேலத்தில் இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட ஷெரிலை சிறையில் அடைத்தனர். இவரிடம் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து இனிதான் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு உடந்தையாக செயல்பட்ட காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

The post அவசர மருத்துவ உதவிக்கு என கேட்டு பேடிஎம் மூலம் பரிவர்த்தனை செய்வதாக பணம் மோசடி; இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Paytm ,Tambaram ,
× RELATED பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா