×

பண்ணைக்குட்டை அமைக்க மண் அள்ளி உதவிய கலெக்டர்

நாட்றம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் நடவடிக்கையாக 1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜோலார்பேட்டை ஒன்றியம், அம்மணாங்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட, காட்டூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், கலெக்டரும் சிறிது நேரம் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டார். இதனால் தொழிலாளர்கள் உற்சாகமடைந்து வேகமாக பணி செய்யத்தொடங்கினர். கலெக்டரின் சேவை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

The post பண்ணைக்குட்டை அமைக்க மண் அள்ளி உதவிய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Nattrampalli ,Tirupathur district ,Jollarpet ,Dinakaran ,
× RELATED ஜோலார்பேட்டை அருகே எரிகல் விழுந்த பகுதியில் செல்பி எடுக்க திரளும் மக்கள்