×

பெயின்டருக்கு வெட்டு

பெரம்பூர்: அயனாவரம் சோலை மெயின் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (29). இவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.இவரிடம் அயனாவரம் சபாபதி தெருவைச் சேர்ந்த சிவா (41) பெயின்டிங் வேலை செய்து வந்துள்ளார். அடிக்கடி சண்டை போட்டுவிட்டு ரஞ்சித்திடம் பணம் வாங்கிச் சென்று, அதை சிவா மதுகுடித்து வந்துள்ளார். சிவாவின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் ரஞ்சித் சில நாட்களுக்கு முன்பு சிவாவை வேலைக்கு அழைப்பதை நிறுத்திவிட்டார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சிவா நேற்று முன்தினம் மாலை அயனாவரம் சபாபதி தெருவில் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே ரஞ்சித் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே கையில் இருந்த பிளேடை எடுத்து ரஞ்சித்தை சிவா சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் இடது பக்க கையில் ரஞ்சித்துக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரஞ்சித் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று காலை சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பெயின்டருக்கு வெட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ranjith ,Ayanavaram Solai Main Street ,Ayanavaram Sabapathi ,
× RELATED பெங்களூருவில் இருந்து சென்னை...